Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
பாஜகவின் சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றதையடுத்து விமான நிலையத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கி உரையாற்றினார். பின்னர் ஐஐடி மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
இதனிடையே பிரதமர் மோடி சென்னை வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் ட்விட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதில் எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. அத்துடன் #TNWelcomesModi,என்ற ஹேஸ்டேக் ஆதரவு தெரிவித்து ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் #GoBackModi, என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது குறித்து பாஜகவின் எச். ராஜா ட்விட் செய்துள்ளார். அதில் Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று நையாண்டியாக பதிவிட்டார். அத்துடன் மறைந்த பத்திரிகையாளர் சோ, பிரதமர் மோடியை பெருமையாக பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.
Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி…#TNWelcomesModi pic.twitter.com/XyK5TeKJzC
— H Raja (@HRajaBJP) September 30, 2019