Categories
மாநில செய்திகள்

பாஜகவுக்கு தலைகுனிவு ”#GoBackModi VS #TN_welcomes_XiJinping ” இந்தியளவில் ட்ரெண்டிங் …!!

மோடிக்கு எதிராகவும் , சீன பிரதமருக்கு ஆதரவாகவும் ஹேஷ்டாக் ட்ரெண்டாவது  வைத்துள்ளது.

இந்திய பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக  #gobackmodi  என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாவது வழக்கம். அந்தவகையில் இன்று தமிழகம் வரும் சீன அதிபர் ஷி ஜின்பிங் , மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இதற்கான மென்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டு வந்தது .

இன்றும், நாளையும் நடைபெறும் இந்திய பிரதமர் மோடி , சீன அதிபர் சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். உலக நாடுகளின் கவனம் தமிழகம் மீது விழந்துள்ள நிலையில் தமிழக மக்களின் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோடிக்கு எதிராக உலக மக்களின் பார்வையை திருப்பிள்ளனர் என்றால் மிகையாகாது.

தொடர்ந்து தமிழகத்தை மத்திய பாஜக வஞ்சித்து வருகின்றது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் ஹிந்தி திணிப்பு , நீட் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , ஜல்லிக்கட்டு என தமிழக மக்களின் எதிர்ப்பு பாஜக மீது இருந்து வருகின்றது. அதை மெய்ப்பிக்கும் வகையிலே பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம்   #gobackmodi   என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகும்.

https://twitter.com/Udaya21103809/status/1182460499167862785

அதே போல இன்றும் #gobackmodi  என்ற ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. அதில் இன்னும் வேடிக்கை என்னெவென்றால் சீன அதிபரை வரவேற்று #TN_welcomes_XiJinping  என்ற  ஹேஷ்டாக்_க்கும் ட்ரெண்டாகின்றது. உள்நாட்டு பிரதமரை எதிர்க்கும் மக்கள் அந்நிய நாட்டு அதிபரை வரவேற்பதில் இது உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.

பாஜக கட்சியை சோகத்தில் ஆழ்த்திலுள்ள இந்த சம்பவம் தமிழக பாஜகவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதலே இந்தியளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. ஒட்டு மொத்த தமிழகமும் மோடிக்கு எதிராக தங்களது எதிப்பையும் , சீன பிரதமருக்கான ஆதரவையும் காட்டுவது இந்தியாவுக்கு பாஜக_வை புலம்ப வைத்துள்ளது.

Categories

Tech |