செங்கல்பட்டில் சிவாலயத்திலிருந்து வெளியே வந்த 9 ஆம் வகுப்பு மாணவனை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் உஷா தம்பதியினர். இவரது மகன் புருஷோத்தமன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களுக்கு சொந்த ஊர் விழுப்புரம் ஆக இருக்கும் பட்சத்தில் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
உஷா அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார் உஷா. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த சமயத்தில், வெண்பாக்கம் சாரதாம்பாள் நகர் அருகில் உள்ள தனியார் கிணற்றில் அடையாளம் தெரியாத சடலம் மிதப்பதாக ஐடிஐ மாணவர்கள் போலீசிடம் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட பொழுது அது புருஷோத்தமன் உடல் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், புருஷோத்தமன்க்கு கடவுள் பக்தி அதிகம் என்பதும், அவர் அதே பகுதியில் உள்ள சிவாலயம் ஒன்றில் தினசரி வழிபட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கழுத்தில் கம்பி வைத்து நெரித்த காயம் இருப்பதாகவும், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் அவர் உடல் கிடந்ததால் அவர் சன்னதியில் இருந்து வெளியில் வரும் பட்சத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.