Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை கோவிலில் மலைப்பாதையிலிருந்த முருகன், சிவன், பார்வதி சிலைகளை மர்ம நபரகள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் மலைமேல் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். அங்கு மலைமேல் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று சாமியை வழிபட்டுவதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது .அந்த மலைப் பாதையில் ஒரு புறத்தில் முருகன், சிவன், பார்வதி, புலி மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் செய்து பக்தர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்போது கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை ஓரத்திலிருந்த சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இந்த சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |