Categories
அரசியல்

“தீபாவளியில் கோதா கௌரி விரதம்” சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்…. இதோ பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட ‌ இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதம் மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்வது வழக்கம். இதில் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதத்தை பெண்கள் இருப்பதன் மூலம் கணவன்-மனைவி ஒற்றுமை மேம்பட்டு வீட்டில் நன்மைகள் பெருகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து மாலை வரை எதுவுமே சாப்பிடாமல் இருப்பதோடு பூஜை முடிவடைந்த பிறகு பால் மற்றும் பழம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் கோதா கௌரி பூஜை  எப்படி செய்யப்படுகிறது? எதற்காக செய்யப்படுகிறது? அதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதாவது தீபாவளி என்பது சிவனுக்குரிய திருநாள் என்று கந்தபுராணத்தில் கூறப்படுகிறது. அதன் பிறகு திங்கட்கிழமை அன்று சந்திர பகவான் சிவபெருமானின் மனதில் இடம் பிடித்து அவருடைய தலையில் குடிகொண்டார். இதனால் திங்கட்கிழமை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திங்கட்கிழமை திருநாளில் சந்திர பகவான் சிவபெருமானுக்காக விரதம் இருந்து அவருடைய மனதில் இடம் பிடித்து தலையில் குடி கொண்டார். இதில் மிகச் சிறப்பு என்னவென்றால் இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது திங்கட்கிழமை வருகிறது. எனவே திங்கட்கிழமையன்று சிவபெருமானுக்காக விரதம் இருந்து நாம் பூஜைகள் செய்தால் மிகவும் சிறப்பு.

இதைத்தொடர்ந்து சிவபெருமானின் தலையில் குடி கொண்டிருக்கும் கங்காதேவி தீபாவளி பண்டிகையின் போது சுடுதண்ணீரில் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் அதிகாலை 3 மணியிலிருந்து 5:30 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் தடவி சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். இதனால் கங்கா ஸ்நானம் செய்தற்கான புண்ணியம் கிடைக்கும். நல்லெண்ணெய் குளியல் முடிந்த பிறகு வீட்டில் உள்ள பூஜை அறையில் 3 வாழை இலைகளைப் படைத்து வீட்டில் செய்து வைத்திருக்கும் பலகாரங்கள் மற்றும் புது துணிகளை வைக்க வேண்டும். கோதா கௌரி திருநாளில் தீபத்தின் ஒளியில் சிவபெருமானை காண வேண்டும் என்ற ஐதீகம் இருப்பதால் பூஜை அறை முழுவதும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

பூஜை அறை முழுவதும் விளக்கேற்ற முடியாதவர்கள் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். நடபாண்டில் தீபாவளி பண்டிகை முடிவடைந்த பிறகு மறுநாளில் அக்டோபர் 25-ஆம் நாள் சூரிய கிரகணம் வருவதால் அன்றைய நாள் கோதா கௌரி விரதத்தை இருக்க முடியாது. எனவே தீபாவளி அன்றே விரதம் இருந்து மறுநாள் காலை 11 மணிக்குள் விரதத்தை முடித்து விட வேண்டும். தீபாவளி பண்டிகையின் போது மாலை நேரத்தில் குபேர லட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மேலும் தீபாவளி பண்டிகையின்போது சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி விரதத்தை இருப்பதோடு லட்சுமி குபேர பூஜையும் செய்து நன்மைகளையும் பரிபூரண அருளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |