புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளதால் தனது ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
குக் வித் கோமாளியின் முதல் சீசன் சூப்பர் ஹிட்டான நிலையில் இரண்டாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. அதில் அஸ்வினி, கனி, பவித்ரா, லட்சுமி, புகழ் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இருக்கிறார்கள். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஆர்மி ஆரம்பிப்பது போல குக் வித் கோமாளி பிரபலங்களுக்கும் சமூக வலைத்தளங்கள் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் விஜய்டிவி மூலம் பிரபலமடைந்த புகழ் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அதை அவர் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.