Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோர்ட்டில் பல்டி அடித்த சுவாதி: நீதிபதி கடும் எச்சரிக்கை…!!

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலை முதல் தற்போது வரை மிகப் பெரிய பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,  கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜ் என்பவருடைய காதலி தோழி என்று கருதப்பட்ட சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலையில்  ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏனென்றால் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதக்கூடிய சுவாதி கிழமை நீதிமன்றத்தில் பிறழ்  சாட்சியாக மாறியுள்ளார். ஆனால் அவர் 164 பக்க வாக்கு மூலத்தை சிசிடிவி காட்சிகளில் பதிவில்  கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு எதிராக பிறழ்ச்சியாக மாறியுள்ளார். எனவே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியை நேரில் ஆஜர் படுத்தி விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து தான் இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  பின்பு நீதிமன்ற  நீதிபதிகள் அனைவரின் முன்னிலையில் சுவாதி கூண்டில் ஏற்றப்பட்டு,  விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது,  மிகப்பெரிய எல்இடி டிவி ஒன்று வைக்கப்பட்டு,  அதில் சம்பவத்தன்று நடைபெற்ற சிசிடிவி காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த திரையிடப்பட்ட காட்சிகளை ஒரு நிமிடமாக,  ஒரு நொடி நொடியாக நீதிபதிகள் சுவாதியிடம் காண்பித்து, இது யார் ? இது யார் ? என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக சம்பவத்தன்று கோகுல்ராஜ்,  சுவாதியும் கோவிலில் இருந்து வெளியே வருவது போவது போன்ற காட்சிகளை காட்டி இந்த திரையில் காணக்கூடிய பெண் யார் ? என்று ஸ்வாதியிடம் கேட்டபோது,  அது எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

இதை கேட்டு தான் நீதிபதிகள் கோபமடைந்தனர். இந்த திரையில் உள்ளது நீங்கள் தான். ஆனால் தான் இல்லை என்று கூறி இருக்கிறீர்கள். நான் இல்லை என்று கூறுகிறீர்கள். அருகில் இருக்கக்கூடிய மாணவனை தெரியுமா ? என்று கேட்டபோது,  அது கோகுல்ராஜ் போல் தெரிகிறது என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று கோகுல்ராஜ் கடத்தப்பட்ட அன்று சுவாதி சுவாதி மற்றவர்கள் பேசிய ஆடியோவும் நீதிமன்றத்தில் அதிக சவுண்ட் ஒலியுடன் ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசிய சுவாதி ஒரு சில தகவல்களை அந்த நபரிடம் தெரிவிக்கிறார்.  அந்த ஆடியோவை குறிப்பிட்டு நீதிபதிகள் சுவாதியிடம் இந்த ஆடியோவில் பேசியது யார் ? என்று தெரியுமா என்று கேட்டபோது,  ஆடியோவில் பேசியது ஒரு பெண் பேசினார். ஆனால் அது நான் இல்லை என்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் 164 வாக்குமூலத்தை படித்து,  இது ஏதாவது உங்கள் வாக்குமூலம் என்று ஒத்துக் கொள்கிறீர்களா ? என்று கேட்டபோது,  காவல்துறையினர் என்னிடம் எழுதிக் கொடுத்து சொல்ல சொன்னதை விசாரணை நீதிமன்றத்தில் சொன்னேன், அதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றார்.

இதில் உச்சபட்சமாக யுவராஜாவது யார் என்று தெரியுமா ? என்று நீதிபதிகளை கேள்வி எழுப்பினார். யுவராஜ் எனக்கு இந்த வழக்கில் யார் என்று தெரியாது. தற்போது செய்திகளை பார்த்து அவர் கொலை வழக்கில் உள்ளதாக தெரிந்து கொண்டேன் என்று சொன்னதை தொடர்ந்து தான் நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். உண்மையை விளக்குவதற்காக நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டுள்ளீர்கள். சத்தியம் மிகப்பெரியது.

ஜாதி மிகப் பெரியது இல்லை. எனவே நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மாறாக  நான் இல்லை என்பது தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். இவ்வாறு கூறினால் நீதிமன்ற குற்றவியல் கிரிமினல்   நடவடிக்கை உங்கள் மீது எடுக்கப்படும், வேறு வழியில்லை என்று கூறி,  தற்போது வழக்கை 15 நிமிடம் இடைவெளிக்காக..  சுவாதி யோசித்து மீண்டும் பதில் சொல்லுங்கள் என்று சொல்வதற்காக ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |