Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை…. நிதி அமைச்சர் வீட்டில் போடப்பட்ட கோலம்… வைரலாகும் புகைப்படம்….!!

அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய வீட்டில் கோலமிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள்,பாஜக தலைவர்கள் ட்விட்டரில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டு பூஜையறையில் பாரம்பரிய முறையில் கோலமிட்டு அந்தக் கோலத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவிட்டுள்ள பதிவில், “வீடுகளில் தினமும் புதிதாக அரிசி மாவில் கோலமிடுவார்கள். இந்தக் கோலம் இன்று எனது வீட்டில் சிறிய கோயில் போன்ற பூஜையறையில் இடப்பட்டது’’ என்று பதிவிட்டிருந்தார். மேலும் அவர் போட்டுள்ள, கோலத்துக்கு மேலே சம்ஸ்கிருதத்தில் ராமஜெயம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் படத்தை எடுத்து ட்விட்டரில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |