தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தமிழக அரசின் திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சுமார் 135 படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திட்டத்தின் கீழ் மொத்தமாக நேற்று 33,75,000 ரூபாயும், 1,080 கிராம் தங்கமம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களான பழனிமணி கணேசன், நிவேதா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் உதயராணி, தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் தங்கம் வாங்கிய பெண்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.