கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் பெரியார் குலத்தைச் சார்ந்தவர் கந்தன்-ரஞ்சிதகனி தம்பதியினர். ரஞ்சிதகனி தனது மகனான பிரபுவுடன் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலுக்கு தைத் திருவிழா தேரோட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். சாமியைக் கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்ததும் ரஞ்சிதகனி கழுத்தில் இருந்த 61/2பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவிலில் தேடிப்பார்த்தும் சங்கிலி கிடைக்கவில்லை என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் சங்கிலியை பறித்து இருக்கலாம் என கருதிய ரஞ்சிதகனி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 61/2பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போன சம்பவம் கோவிலில் உள்ள பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.