Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு..!!

தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரிடம் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் தாம்பரம் மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கார்த்திக் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கார்த்திக் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்று காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |