தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 184 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ184 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 184 குறைந்து 29,512க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ23 குறைந்து ரூ 3,689_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளி விலையானது 20 காசு குறைந்து ரூ 51.70_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.