Categories
தேசிய செய்திகள்

தங்கத்தில் முதலீடு செய்யலாமா ? இது சரியான நேரமா? – பரபரப்பு தகவல் …!!

கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 47,110 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த விற்கப்பட்ட 24 கேரட் தங்கம் ஜூன் 12ஆம் தேதி அதிலிருந்து 18 சதவீதம் உயர்ந்து  விற்கப்பட்டுள்ளது. தங்கத்தை அதிகமாக நேசிக்கும் இந்திய மக்களுக்கு இந்த விலையேற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொருநாளும் குறைந்து வரும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம், நிலையற்ற பங்குச்சந்தையினால் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முயற்சியை தொடங்கியுள்ளனர். கொரோனா  ஊரடங்கு இருப்பதால் நேரில் சென்று தங்கம் வாங்குவதை குறைந்திருக்கும் நேரத்தில் இணையதளம் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகின்றது.

எதற்காக இந்தியர்கள் தங்கத்தை விரும்புகிறார்கள்?

  • தங்க நகைகள் மீது இருக்கும் ஆசை.
  • தங்கத்தை விரைவில் பணமாக மாற்ற முடியும்.
  • வளங்குன்றா வளர்ச்சி.

பேரிடரிலும் ஜொலிக்கும் தங்கம்

எந்த சூழலிலும் தங்கத்திற்கு தனி மவுசு உண்டு. ஆபத்து இல்லாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். கொரோனா தொற்றால் பொருளாதாரம் சரிந்து வரும் சூழலில் தங்கத்தின் விலை மட்டும் உயரத்தை எட்டுவதை வைத்தே புரிந்து கொள்ளலாம். கொரோனா பொருளாதாரத்தை பெரிய அளவில் தாக்கும் என நிபுணர்கள் கூறிவரும் நிலையில் தங்கத்தின் மதிப்பை பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அழைப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம்

முதலீடு என வந்துவிட்டாலே நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது கிடையாது.இது தங்கத்தில் முதலீடு செய்யும் போதும் பொருந்தும். நீண்ட கால முதலீட்டாளர்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காத்துக்கொண்டே இருந்தால் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். உடனடியாக வருமானம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்யும் போது தற்போதைய காலத்தில் தங்கத்தின் மதிப்பு எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதை பார்ப்பதைவிட  வரும் காலத்தில் எந்த வளர்ச்சியை எட்டும் என கணித்து மிகவும் கவனமாக வாங்க வேண்டியது அவசியம். கடந்த ஆண்டுகளில் தங்கத்தின் வளர்ச்சி குறித்து அறிந்தாலே அனைத்தும் புரிந்துவிடும் ஒரு வருடத்திற்கு 11.3% தங்கம் வளர்ச்சியடைந்தது

எவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்வது?

  • மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது போன்று தங்கத்திலும் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும்.
  • தங்கத்தின் விலை வாங்கிய நாட்களில் இருந்து தற்போது வரை எந்த அளவிற்கு வளர்ச்சி கொண்டுள்ளது என்பதை தெரிந்து வைக்க வேண்டும்.
  • 5 முதல் 15 வரை தங்கத்தில் முதலீடு செய்து வைப்பது கஷ்ட காலத்தில் கைகொடுக்கும். பெரும் நஷ்டம் ஏற்படும் பொழுது இழப்புகளை தங்கம் மூலம் ஈடு கட்டலாம்.

எதை செய்வதாக இருந்தாலும் அதன் நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்டது அதன்பிறகு தெளிவாக முடிவெடுக்க வேண்டும்

Categories

Tech |