Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் தங்க நகையா…? தூய்மை பணியாளரின் நேர்மை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டியில் கிடந்த 10 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியில் இருக்கும் குப்பை தொட்டியில் மோகனசுந்தரம் குப்பைகளை தரம் பிரித்து கொண்டிருந்த போது அதில் கிடந்த ஒரு பையில் தங்க நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் மோகனசுந்தரம் அந்த நகையை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியில் வசிக்கும் தேவி என்பவர் காவல் நிலையத்தில் தனது 10 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேவியின் திருமணத்திற்காக வாங்கிய 10 பவுன் நகையை எடுத்து வைக்கும் போது தவறுதலாக குப்பை கொட்டும் பையில் வைத்ததால் இவ்வாறு நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதன்பின் குப்பைத் தொட்டியில் கிடைத்த நகை தேவியின் நகை தான் என்று உறுதிப்படுத்திய பிறகு காவல்துறையினர் அதனை அவரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் தூய்மைப் பணியாளர் நேர்மையாக குப்பைத் தொட்டியில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்ததால் அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |