தங்கம் மீது இருந்த பிரியத்தால் 2,89,000 ரூபாய்க்கு முக கவசம் செய்து அணிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடுகளிடையே கொரோனா பரவ தொடங்கியதும் முக கவசம் அணிவதும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முக கவசங்களை அணியத் தொடங்கினர். சிலர் கொரோனா பரவலை தடுக்கும் சக்தி வாய்ந்த N95 முக கவசங்களை தேடி கண்டுபிடித்து அணிய தொடங்கினார். இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் முக கவசம் ஆகும். ஆனால் பலர் துணியில் செய்யப்பட்ட முக கவசத்தையே அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில் புனேயை சேர்ந்த ஷங்கர் என்பவர் 2,89,000 செலவில் முக கவசம் தயார் செய்துள்ளார். இதுகுறித்து ஷங்கர் கூறுகையில் ” இது மிகவும் மெலிதாக உள்ளது. இதில் சிறிய இருப்பதனால் மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. ஆனால் தொற்றுக்கு எதிராக திறம்பட வேலை செய்யுமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை” என கூறியுள்ளார். சிறு வயது முதலே இவருக்கு தங்கம் என்றால் மிகவும் பிரியமாம். அதனை அவர் அணிந்திருக்கும் தங்கமே உணர்த்திவிடும்.
பத்து விரல்களிலும் மோதிரம், வலது கையில் தங்க காப்பு, இடது கையில் பிரேஸ்லெட், கழுத்தில் தங்கச் சங்கிலி என உடல் முழுவதும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை காணப்படுகின்றது. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் யாரோ ஒருவர் வித்தியாசமாக முக கவசம் செய்து அணிந்திருப்பதை பார்த்துள்ளார். இதனால் இவருக்கும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
ஐந்தரை பவுன் எடை கொண்ட தங்கக் முக கவசத்தை தயார் செய்ய முடிவு செய்து ஒரு வாரத்தில் பொற்கொல்லர் மூலமாக தயார் செய்துவிட்டார். முக கவசம்குறித்து ஷங்கர் கூறுகையில் “எனக்கு மட்டுமல்லாது என் குடும்பத்திற்கு தங்கம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர்கள் தங்க முக கவசம் கேட்டாலும் உடனடியாக செய்து கொடுப்பேன். இதனை அணிந்திருந்தால் தொற்று வருமா வராதா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது” என கூறியுள்ளார்.