Categories
உலக செய்திகள்

“இதுவரை இந்த மாதிரி சிலைகள் கிடைக்கல”…. சீனாவில் பௌத்த மதம் பரவியதற்கான சான்று இதோ….!!

சீனாவில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை ஷாங்சி மாகாணத்தில் மே மாதம் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த கல்லறைக்குள் பித்தளையால் செய்யப்பட்ட இரண்டு புத்தர் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு சுமார் 10 1/2 மற்றும் 16 சென்டி மீட்டர் உயரத்தில் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு சீனாவில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆராய்ச்சியாளர்கள் பட்டுப்பாதை வழியாக தெற்காசியாவில் இருந்து சீனாவிற்கு பௌத்த மதம் பரவியதை இந்த புத்தர் சிலைகள் உணர்த்துவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |