Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : காலையில் ஏற்றம்… மாலையில் இறக்கம்… “சரிந்த தங்கம்”… மகிழ்ச்சியில் மக்கள்!

சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை  இன்று காலை  528 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்ந்து  52.60_க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் போர் ஏற்படும் அபாயம் இருந்ததால், பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் பங்குகளை தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 256 குறைந்து ரூ 31, 176க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 32 குறைந்து ரூ 3,897 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து 52.10_க்கு விற்பனை செய்யபடுகின்றது.

Categories

Tech |