சென்னையில் மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் . இன்று காலை (ஜன.09) ஒரு சவரன் ரூ 30,640 என குறைந்து விற்பனையானது.
இந்த நிலையில் தற்போது மாலை சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 736 குறைந்து ரூ 30,440 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 92 குறைந்து ரூ 3,805க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ 1. 70 காசுகள் குறைந்து 50.40_க்கு விற்பனை செய்யபடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.