கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் 1 பவுன் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ 464 அதிகரித்து ரூ 26,168_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஏற்கனவே நேற்று ஒரே நாளில் 536 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 464 உயர்ந்துள்ளது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது. கடந்த இரண்டு நாளில் மட்டும் 1000 ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.