அபுதாபியில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் அபுதாபியிலிருந்து பயணிகள் வந்துள்ளனர். அப்போது அந்த பயணிகளிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, மூன்று பயணிகளை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் அகமது அலி, மதுரை மாவட்டத்தில் வசித்து வரும் சுகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் ரஹ்மதுல்லா என்பதும், அவர்கள் மூவரும் 2 1/2 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் அவர்களிடமிருந்த இரண்டரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.