சட்ட விரோதமாக மின்சார அடுப்புக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் விமானத்தில் பயணித்த நபர்களை சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து திருவாரூரில் வசிக்கும் சரவண குமார் என்பவர் கொண்டுவந்த மின்சார அடுப்பை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அதன் உள்ளே சரவணகுமார் 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் சரவண குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.