‘கோல்ட்’ படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”பிரேமம்”. இந்த திரைப்படம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்தது. இந்த படத்தில் சாய் பல்லவி, நிவின் பாலி, அனுபமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இதனையடுத்து இந்த படத்தினை அடுத்து இவர் தற்போது ”கோல்ட்” என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் பிரித்திவிராஜ் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டீஸர் வெளியாகியுள்ளது. ரசிகர்களை தற்போது இந்த டீசர் கவர்ந்து வருகிறது.