Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுநீர் கழிக்க சென்ற மகன்….. தூங்கி கொண்டிருந்த தாய்….. கை வரிசை காட்டிய திருடன்….!!

வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் சுதன் மற்றும் தனுசு என்ற மகன்களும் உள்ளனர். கந்தன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கந்தன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது இயற்கை உபாதை கழிப்பதற்காக தனுசு வீட்டின் கதவை திறந்து வெளியில் சென்றுள்ளார்.

அச்சமயம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த சுகன்யாவின் கழுத்தில் இருந்த 4 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து கந்தன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிந்து தங்க நகையை திருடிச் சென்ற அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |