Categories
உலக செய்திகள்

பிரபல மலையாள நடிகர்களுக்கு ‘கோல்டன் விசா’.. அமீரகத்தில் நேற்று வழங்கப்பட்டது..!!

அமீரகத்தில் நேற்று, பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருக்கும் 10 வருடங்களுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது.
அமீரகத்தில், மருத்துவர்கள், திறனாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு கோல்டன் விசா என்ற தலைப்பில் 10 வருடங்களுக்கான  விசா அளித்து வருகின்றனர். இதில், எப்போதாவது, சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கோல்டன் விசா அளிக்கப்படும்.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில், துபாயில் வாழ்ந்து வரும் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவிற்கும் அவரின் கணவர் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோகைப் மாலிக்கிற்கும் 10 வருடங்களுக்கான கோல்டன் விசா அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு, மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையம் தான், கோல்டன் விசாவை வழங்கியிருக்கிறது.
இதற்கு முன்பே, இந்தி நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் போன்ற இருவரும் இந்த கோல்டன் விசாவை பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில், அந்த துறையின் தலைவரான முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி, பிரபல மலையாள நடிகர்களான, மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருக்கும் இந்த கோல்டன் விசாவை அளித்து சிறப்பித்தார்.
தென்னிந்திய நடிகர்களில் இவர்கள் இருவரும் தான், முதன் முதலாக இந்த விசாவை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு, கோல்டன் விசாவை பெற்ற மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரும் அமீரக அரசு மற்றும், தலைமைக்கு நன்றி தெரிவித்தனர்.

Categories

Tech |