அமீரக அரசானது பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய பிறநாட்டு மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் 10 வருடத்திற்கான கோல்டன் விசா அளிப்பதாக அறிவித்திருக்கிறது.
அமீரகத்தில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து பிற நாட்டு மக்களை ஈர்க்கும் படி, நீண்ட காலங்களுக்கான கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டது. ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை உபயோகிக்கும் வகையில் இந்த விசா அளிக்கப்பட்டது.
மேலும், தற்போதுவரை, அமீரகத்தின் விசா வைத்துள்ள பல்கலைகழகத்தின் மாணவர்கள் அல்லது அமீரகத்தின் விசாவில் பிற நாட்டில் பயின்றுவரும் மாணவர்கள் போன்றோர் தரவரிசையில் சராசரியாக 3.75 புள்ளிகள் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு, 10 வருடங்களுக்கான கோல்டன் விசா அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, அதில் அதிகமான சலுகைகள் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் வாழும், நன்றாக படிக்கக்கூடிய பிற நாட்டு மாணவர்கள், அவர்களது குடும்பத்தினரையும் ஊக்கப்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களுக்கும் கோல்டன் விசா அளிக்க அமீரகம் முடிவெடுத்துள்ளது.
இதில் மாணவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தாருக்கும் பத்து வருடங்களுக்கு கோல்டன் விசா அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் 95 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்த கோல்டன் விசா கிடைக்கும். தற்போது அரசின் இந்த அறிவிப்பை, அமீரகத்தில் இருக்கும் பல கல்வி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.