Categories
அரசியல் மாநில செய்திகள்

1/2மணி நேரத்துல போயிருது..! கமிஷன் கேட்குறாரு… PTRமீது பரபரப்பு குற்றசாட்டு…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணி பற்றி நிதி அமைச்சருக்கு முழுமையாக தெரியவில்லை என்று தான் நினைக்கிறேன். மதுரையை பற்றி முதலில் அவரை ஒரு ஆய்வு செய்ய சொல்லுங்கள், அவர் அந்த துறையை ஆய்வு செய்ய மாட்டேன்கிறார். அவரைப் பற்றி திமுகவில் இருப்பவர்களை நிறைய பேர் தலைமை நிர்வாகிகள் சொல்வது என்னவென்றால், கமிஷன் கேட்டுக்கொண்டு தெரு விளக்கு போட மாட்டேங்கிறார்.

அதனால் டெண்டர் போகாமல் உள்ளது என்று குறை சொல்கிறார்கள். இந்த ஸ்மார்ட் சிட்டி பணி என்பது முழுக்க, முழுக்க அவர் தொகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு மாசிவீதியில் இருக்கின்ற சாலைகளில் இன்றைக்கு செப்பனிட்டு இருக்கிறார்கள். இந்த உலகத்தரம் வாய்ந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நான்கு மாசி வீதியிலும் பார்த்தீர்கள் என்றால், மின்கம்பங்கள், கேபிள் கனெக்சன், சாக்கடை கழிவு நீர் செல்கின்ற வழி, நல்ல தண்ணீர் போகின்ற லைன் எப்படி பொருத்தப்பட்டிருக்கிறது ?

முழுக்க முழுக்க அவர்கள் தொகுதி தான். மத்த பகுதியில் இன்னும் எடுக்கவில்லை. குறிப்பிட்ட பகுதியில் தான் ஸ்மார்ட் சிட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இது முதல் கட்டம், அதில் கூட நாம் நிறைய பகுதியில் ஸ்மார்ட் சிட்டி எடுக்காத பணிகள் எங்கள் காலத்தில் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் வந்து ஒன்றை வருடம் ஆகிறது. இதுவரைக்கும் செய்திருக்க வேண்டும் அல்லவா ? செய்யவில்லையே.

நான் நிதி அமைச்சரை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி தான் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாசி வீதிகளில் வருகின்ற தண்ணீரில் அப்புறப்படுத்துவதற்கு வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது, இந்த வடிகால் எல்லாம் மழை பெய்தது என்றால் ஒரு நாள் கிடக்கும், கிட்டத்தட்ட 24 மணி நேரம் 10 மணி நேரம் இருக்கும். இப்போது அரை மணி நேரத்தில் செல்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |