பற்களில் மஞ்சள் கரையை நீக்குவதற்கான செயல்முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
மக்களில் பலர் தங்களது தோற்றம் சிறப்பாக இருந்தால் மற்றவர்கள் நம்மிடம் நெருங்கி பழகுவார்கள் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள் என தங்களது தலை முதல் பாதம் வரை நன்கு பராமரித்து வருவார்கள். தங்களது தோற்றத்தை மற்றவர்கள் முன் சிறப்பாக காட்டுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அந்தவகையில், பற்கள் மஞ்சள் கரை இல்லாமல் பளபளப்பாக இருப்பதை மக்கள் பெரிதும் விரும்புவார்கள். பற்கள் மஞ்சள் கரையாக இருந்தால் பார்ப்பவர்களுக்கு அது ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தும்.
எனவே பற்களில் இருக்கக்கூடிய மஞ்சள் கரையை மிகச் சுலபமான முறையில் நீக்கலாம். எப்படி என்றால், வாழைப்பழத் தோலை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்து பற்களில் இரண்டு நிமிடம் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கும். அதேபோல் தேங்காய் எண்ணையை சிறிது வாய்க்குள் விட்டு கொப்பளித்து பின் கைகளால் பற்களை நன்கு தேய்த்தால் வாய் துர்நாற்றத்துடன் மஞ்சள் கரை நீங்கி பற்களும் வெண்மையாகும்.