Categories
அரசியல் மாநில செய்திகள்

“தபால்துறை தேர்வு தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்” அமைச்சர் கருப்பணன்..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார் 

மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இனி  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும்,  இந்த இரண்டு மொழிகள் தவிர  தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும்,  அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Image result for அமைச்சர் கருப்பணன்

இந்த நிலையில், இது குறித்து பேசிய  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன், தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், தபால்துறை தேர்வை தமிழில் எழுத முடியாதது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |