Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நல்ல ஆரோக்கியம் தர இந்த குடிநீர்களை சாப்பிடுங்கள்… நல்ல பலன் கிடைக்கும்..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்தால், உடல் சோர்வு மற்றும் அதிக தாகம் அடங்கும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால் காயத்தை (பெருங்காயம்) தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுப்பிடிப்பு, ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம் தொண்டைக்கட்டு குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் சீரகம் போட்டு சிறிதளவு சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு வயிற்று உப்புசம் உடல் சூடு தணியும். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவாரம் பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்து வந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.

Categories

Tech |