சமண சமயத்தின் முக்கிய மூன்று கோட்பாடுகள் ரத்தினங்களாக கருதப்படுகின்றன. அவை
- நல்ல அறிவு
- நல்ல நம்பிக்கை
- நல்ல நடத்தை
நல்ல அறிவு என்பது கடவுள் இல்லை எனும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு யாரும் உலகத்தை படைக்கவில்லை என்பதையும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆன்மா என்று ஒன்று உள்ளது என்பதையும் உணர்வதாகும்.
நல்ல நம்பிக்கை என்றால் மகாவீரரின் அனைத்து விதமான கருத்துக்களிலும் அவரது பேரழிவில் அதிக அளவில் நம்பிக்கை வைப்பதாகும்.
நல்ல நடத்தை என்றால் ஐந்து முக்கியமான விரதங்களை எந்த மாற்றங்களும் இல்லாமல் கடைப்பிடிப்பதை குறிக்கும். அதை
- பொய் கூறாமை
- சொத்துக்களை பற்றுதலை விடுதல்
- களவு செய்யாமை
- உயிர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமை
- ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமை
சமய மக்களுக்கும் சீனர்களுக்கும் அகிம்சை கோட்பாட்டை ஒரு தவறும் இல்லாமல் கடைபிடித்தல் அவசியம் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து ஜீவன்களும் ஆன்மா கொண்டுள்ளது என மகாவீரர் கூறியுள்ளார். அவற்றுக்கும் உயிர் உள்ளது காயப்படுத்தினால் அவற்றிற்கும் வலி ஏற்படும் என எண்ணினார் மகாவீரர். வேதங்களின் ஆதிக்கங்களை மறுத்த மகாவீரர் வேத சமயத்தில் சடங்கு சம்பிரதாயங்களையும் எதிர்த்தார். ஒழுக்கமான வாழ்க்கை கடைபிடிப்பதை வலியுறுத்தி வந்தார்.
நிலம், மண், விலங்கு இவற்றிற்கெல்லாம் தீங்கு ஏற்படுவதால் விவசாயம் செய்வது கூட பாவம் என கருதியுள்ளார் மகாவீரர். உணவருந்தாமல் இருப்பது, ஆடைகளைத் துறப்பது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளினால் வாழ்க்கையின் உச்சகட்டத்திற்கு அழைத்துச் சென்றார் மகாவீரர்.