உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் அவர்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி whatsapp நிறுவனம் நீக்கிவிடும். அதன் பிறகு அதிகப்படியான தானியங்கி மெசேஜ்களை அடிக்கடி அனுப்பினால் தற்காலிகமாக முதலில் நீக்கப்படுவார்கள். ஆனால் தற்காலிக தடை நீங்கிய பிறகும் தொடர்ந்து அதை செய்தால் நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள். நிரந்தர தடைக்கு பிறகு நீங்கள் அந்த நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இதனையடுத்து மற்றவர்களின் ப்ரொபைல் போட்டோ மற்றும் அவர்களின் விவரங்களை வைத்து வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஓபன் செய்தாலும் தடை செய்யப்படுவார்கள்.
மெட்டா நிறுவனம் உங்களுடைய வாட்ஸ் அப்பை தடை செய்து விட்டால் this account is not allowed to use WhatsApp என்ற மெசேஜ் உங்களுடைய போன் நம்பருக்கு வரும். இந்த மெசேஜ் வந்தால் உங்களுடைய whatsapp தடை செய்யப்பட்டு விட்டது என்று அர்த்தம். மேலும் தவறுதலாக மெட்டா நிறுவனம் whatsapp-பை தடை செய்திருந்தால் நீங்கள் whatsapp நிறுவனத்திற்கு மெயில் அனுப்பலாம். அவர்கள் சரி பார்த்த பிறகு 6 டிஜிட் கொண்ட ஓடிபி நம்பரை அனுப்புவார்கள். இந்த ஓடிபி நம்பரை பயன்படுத்தி மீண்டும் வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.