நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் இனி கல்வி, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் கடனுதவி பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக https://www.jansamarth.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கல்வி,, விவசாயம், வணிகம், வாழ்வாதாரம் என கடன் அமைப்புகளின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 125க்கும் மேற்பட்ட வங்கிகள் இதில் உள்ளன. இந்த இணையதளம் ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.