தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 228 பேர்களும், கோவையில் 127 பேர்களும், திருப்பூரில் 80 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், திண்டுக்கல்லில் 66 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.