Categories
மாநில செய்திகள்

GOOD NEWS: 16,000 பேருக்கு வேலை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஏற்கனவே பெகட்ரான், விஸ் ட்ரான், பாக்சான் நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை சீனாவில் இயங்கி வந்த நிலையில் தற்போது மூடப்படுவதால் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. 60 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் வேலை செய்யும் விதமாக பிரம்மாண்ட தொழிற்சாலை டாடா குழுமம் அமைகிறது. தமிழகத்தில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐபோன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஓசூரில் அமையும் புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயாரிப்பு நடைபெற்று வரும் நிலையில், புதிய ஆலை தொடங்கப்படுகிறது.

Categories

Tech |