Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் …!!

பயிர்க்கடன் செலுத்த 3 மாதம் காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில், கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்டுள்ளது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Categories

Tech |