தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 359 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,599ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் 309 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து ஒருவர், மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களில் 40 பேர், மாலத்தீவில் இருந்து வந்த 6 பேர், குஜராத்தில் இருந்து வந்தவர்கள் – 2 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்னர். தமிழகத்தில் 58 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் 38 அரசு மையங்கள் மற்றும் 20 தனியார் மையங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.