தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் இன்று 23 பேர் உட்பட இதுவரை மொத்தம் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்ற மகிழ்ச்சி தகவலை கூறியுள்ளார். 135 பேர் அரசுக் கண்காணிப்பிலும், 28, 711 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 68, 519 பேர் 28 நாட்கள் கண்காணிப்பில் இருந்து முடித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 19255 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும். 15502 பேர் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார். அதிகபட்சமாக திண்டுக்கல்லில் இன்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.