தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.14% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.
இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 12,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,09,615 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் மையங்கள் என மொத்தம் 68 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்குட்பட்ட 1003 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 13,916 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,358 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.