Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாதமிழ்நாடு, கொரோனா வைரஸ், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கவில்லை. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் இதுவரை 2,99,176 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10,535 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 58லிருந்து 61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 6,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |