நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா இல்லை உறுதி செய்யப்பட்டது. எனினும் ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் ஒய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
மேலும் ரஜினிக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். “டிசம்பர் மாதம், அப்போலோ மருத்துவமனை” பயமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தகவல் அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரஜினி அறிவித்தபடி கட்சியை துவங்குவார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். ரஜினியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு வயது என்பது வெறும் எண் மட்டும் தான், அவர் கட்சி தொடங்குவார், ஆட்சி அமைப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு தெரிவித்து வருகின்றனர்.