Categories
மாநில செய்திகள்

குடி….. மகன்களுக்கு நற்செய்தி…… புதிய நடைமுறை…… தமிழகம் முழுவதும் COMING SOON….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல வருடங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மதுபானம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.

இதனை தடுக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற முறையை  அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் அனைத்தும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், க்யூ ஆர் கோடு, யுபிஐ உள்ளிட்டவை மூலம் மின்னணு முறையில் மட்டுமே செலுத்தமுடியும்.

இதனால் ஊழல் தடுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். இம்முறையை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யவுள்ளதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது.

Categories

Tech |