தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.