2015 ஆம் வருடம் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 2022 ஆம் வருடத்திற்குள் வீடு கட்டி தரப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் 2022ஆம் வருடத்திற்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்பு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில அரசுகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காலத்தில் வீடுகளை கட்டி முடித்து பயனாளிகளுக்கு கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.