தமிழகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள், வேலை தேடி அலைபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய சேவை ஒன்றினை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனர்களில் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை இணையதளம் முதல்வரால் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப்பணியிடங்களை தளத்தில் பதிவு செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற வழிவகை செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.