Categories
தர்மபுரி நாமக்கல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா விவரம்: 3 மாவட்டத்திற்கு நற்செய்தி…. நிம்மதியான மக்கள்….!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டும், அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. தினமும் மாலையில் புதிய பாதிப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அதிகாரிகளால் வெளியிடப்படும். அதன்படி, இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னையில் அதிகபட்ச பாதிப்பாக 2716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையை தாண்டி பிற மாவட்ட பகுதிகளில் 1700-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இன்று புதிய பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்ற நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வெளியே வந்து, தங்களையும், தங்கள் வீடுகளையும், அலுவலகங்களையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இதே நிலையை தக்கவைக்க முடியும் என்று அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |