கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று தெரிவித்தார்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது.
அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் கவனித்து வருகிறோம் ரிவர்ஸ் ரெப்ரோ 4.9 லிருந்து 4 ஆக குறைக்கப்படும் . அதே போல ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று தெரிவித்தார். இதனால் வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.