கொரோனா காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்பதால் நீட் தேர்வு எப்படி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாகவே மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கானஅட்மிட் கார்டு இன்று கொடுக்கப்படும் என்று தெரிவித்ததார்கள்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் நேற்றிலிருந்து இது சம்பந்தமாக மாணவர்கள் மத்திய வனத்துறை அமைச்சகத்தையும் , நீட் தேர்வு நடத்தக் கூடிய நேஷனல் டெஸ்டிங் ஏஜன்ஸியை தொடர்பு கொண்டு பல்வேறு சந்தேகங்களை கேட்டு வந்தனர். கொரோனா அச்சுறுத்தலால் அட்மிட் கார்ட் வாங்க முடியாத சூழல் இருக்கின்றது, எனவே நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் வைத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நீட் தேர்வை நடத்தக் கூடிய நேஷனல் டெஸ்டிங் ஏஜன்ஸி இந்த தேர்வை ஒத்திவைக்கப்படுவதாகவும், இன்னும் சற்று நேரத்தில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இருப்பதாகவும், மாணவர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகம் உறுதியுள்ளதால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.