இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 334 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது.
உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 4ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,946 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,16,752 பேரும், தமிழகத்தில் 50,193 பேரும், டெல்லியில் 47,102 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து , குஜராத்தில் 25,093 பேரும், ராஜஸ்தானில் 13,524 பேரும், உத்தரபிரதேசத்தில் 14,598 பேரும், மத்திய பிரதேசத்தில் 11,244 பேரும், மேற்குவங்கத்தில் 12,300 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,237 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,651 பேரும், குஜராத்தில் 1,560 பேரும், மேற்குவங்கம் 506 பேரும், மத்திய பிரதேசத்தில் 482 பேரும், டெல்லியில் 1,904 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல உத்திரபிரதேசத்தில் 435 பேரும், தமிழகத்தில் 567 பேரும், ராஜஸ்தானில் 313 பேரும் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,390 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,94,325 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,60,384 ஆக உயர்ந்துள்ளது.