Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி- கடம்பூர் ராஜூ..!

திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலிருந்து 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் நெய்வேலி மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயை 18 மணி நேரத்துக்கு மேலாக அவரது  வீட்டில் வைத்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது பிகில் படத்திற்கு 30 கோடி வாங்கியதாக  நடிகர் விஜய் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதியில் நேற்று இரவு 8 மணியோடு விஜய் வீட்டில் சோதனை முடிவடைந்தது.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத் தான் முடியும்.  இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் அதிமுகவை தாக்கியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், இதையெல்லாம் (IT சோதனை) தவிர்க்க வேண்டும் என்றால் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலமாக ஒருபடத்தின் உண்மை தன்மை என்ன, அந்த படம் எவ்வளவுநாள் ஓடியது, எவ்வளவு வசூல் பெற்றது என்று வெளிப்பட தன்மை உருவாகும். விஜய் மீது அதிமுக அரசு பழி வாங்குவதாக காங்கிரஸ் கூறுவது எதனடிப்படையில் என்றும், விஜய் வீட்டில் சோதனை நடத்துவதை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திரையரங்குகளில் மாற்றுத் திறனானிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

Categories

Tech |