Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… TET தேர்வில் தேர்ச்சியா..? விரைவில் பணி நியமன ஆணை..!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஆறு வருடங்களுக்கு மேலாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களின் சான்றிதழ்கள் ஏழு வருடங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் இந்த ஆண்டோடு சான்றிதழ் நேரம் காலாவதி ஆகிறது.

இதனால் பணி நியமன ஆணையை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |